விராலிமலை அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 4 கோடியே 18 லட்சம் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல். 

விராலிமலை அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 4 கோடியே 18 லட்சம் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல்.

பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு விராலிமலை அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த நகைகள் அனைத்தையும் பறிமுதல் செய்த தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் அதனை இலுப்பூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு தங்க நகைகளை ஆர்டிஓ தெய்வநாயகி தலைமையில் நகைகளை எடுத்துச் சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் கணக்கிடப்பட்டு பட்டியலிடப்பட்டது. அதில் 8 ஆயிரத்தி 683 கிராம் எடையுள்ள தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் 4 கோடியே 18 லட்ச ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ஆர்டிஓ தெய்வநாயகி தலைமையிலான அதிகாரிகள் இலுப்பூர் அரசு கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்