செங்குன்றம் போக்குவரத்து போலீசார் சோதனையில் பிடிபட்ட 1 டன் குட்கா. 2 வர் தப்பியோட்டம் போலிசார் விசாரணை.
செங்குன்றம் போக்குவரத்து போலீசார் சோதனையில் பிடிபட்ட 1 டன் குட்கா. 2 வர் தப்பியோட்டம் போலிசார் விசாரணை.
செங்குன்றம் அடுத்த வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் விஜயநல்லூர் அருகே செங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபிதாஸ் தலைமையிலான காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது, குஜராத் மாநில GJ15 CD.2530.பதிவெண் கொண்ட கார் ஒன்று வேகமாக நிற்காமல் சென்றதால் அதனை மடக்கி பிடிக்க முயன்ற போது, வேகமாக சென்று தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
காரில் இருந்த 2 பேர் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சிறுபாலத்தில் இருந்து கீழே குதி்த்து தப்பி ஓடினர். அவர்களை போக்குவரத்து காவல்துறை விரட்டி சென்ற போது, கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தனர்.
இதனையடுத்து சாலையில் நிறுத்தப்பட்ட காரின் சாவியை எடுத்து கொண்டு தப்பிய நிலையில், கிரேன் மூலம் சாலையின் நடுவில் நிறுத்தப்பட்ட காரை அப்புறப்படுத்திய போலீஸ், காரை திறந்து ஆய்வு செய்த போது பண்டல் பண்டலாக சுமார் 1 டன் அளவில் குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
சம்பவம் பற்றி அறிந்த செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் கே.எஸ். பாலகிருஷ்ணன், செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் ராஜா ராபர்ட், சோழவரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். இதனையடுத்து காரையும், குட்காவையும் சோழவரம் காவல் நிலையம் கொண்டு சென்று காவல் துறையினர், தப்பியோடிய 2 பேரை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.