மலேசியாவில் அச்சடிக்கப்பட்ட கள்ள ரூ.500 நோட்டுகள் சென்னை வரை: சர்வதேச கும்பல் சதி அம்பலம்!

மலேசியாவில் அச்சடிக்கப்பட்ட கள்ள ரூ.500 நோட்டுகள் சென்னை வரை: சர்வதேச கும்பல் சதி அம்பலம்!

சென்னையில் உள்ள விடுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.11 லட்சம் மதிப்பிலான போலி ரூ.500 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிராவல்ஸ் அதிபர் ஷபீக் ரகுமான் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ரூ.34 லட்சம் மதிப்பிலான அசல் இந்திய நாணயங்களும், யூரோ கரன்சியும் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில், மலேசியாவில் அதிநவீன தொழில்நுட்பத்தில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் விமானம் மூலம் தமிழகத்திற்கு கடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த கடத்தலில் மலேசியாவைச் சேர்ந்த பரிமளா மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய பங்கு வகித்ததாக போலீசார் தெரிவித்தனர். புவனேஸ்வரி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான பரிமளாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் சர்வதேச கள்ளநோட்டு கும்பலின் செயல்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதால் விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்