பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் திருச்சி லயன்ஸ் சங்கங்கள் மேஜர் சரவணன் நினைவு சதுக்கத்தில் மலர் அஞ்சலி.
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் திருச்சி லயன்ஸ் சங்கங்கள் மேஜர் சரவணன் நினைவு சதுக்கத்தில் மலர் அஞ்சலி.
கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி மேஜர் சரவணன் நினைவிடத்தில் நேற்று மலரஞ்சலி செலுத் தப்பட்டது.
இந்திய ராணுவம் 1999ம் ஆண்டு ஜூலை 26 அன்று கார்கில் போரில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை
பெற்றதன் நினைவாக 2026 ஜூலை 26 அன்று 27வது கார்கில் வெற்றி தினம் நாடு முழுவதும் அனுச ரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, திருச்சி கண் டோன்மெண்டில் அமைந் துள்ள மேஜர் சரவணன் நினைவிடத்தில் திருச்சி மண்டலம் 1-ன் அனைத்து லயன்ஸ் சங்கங்கள் மற்றும் பிற மண்டல சங்கங்களின் சார்பில் மலர் வளையம் வைத்து, மலர்கள் தூவி வீர மரியாதை செலுத்தப் பட்டது. நாட்டிற்காக இன் னுயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை நன்றியுடன் நினைவுகூறும் வகை வகையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மண்டல தலைவர் அரிமா முகமது ஷபி, மாவட்ட நிர்வாக அலுவலர் அரிமா நடராஜன், மாவட்டத் தலைவர் அரிமா பிரசன்ன வெங்கடேசன், மாவட்டத் தலைவர் அரிமா முனைவர் இளங்கோவன், தலைவர் சில்வியா நெப்போலியன், வட்டாரத் தலைவர் லயன் திலகவதி, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மண்டல நிர்வாகிகள் வட்டார நிர்வாகிகள் மற்றும் பிற சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.