ரோட்டரி கிளப் ஆப் திருச்சி தமிழச்சி சார்பில் துவாக்குடியில் மருத்துவ முகாம். ரொட்டேரியன் ஷமீலா ராகுல் பங்கேற்பு.
ரோட்டரி கிளப் ஆப் திருச்சி தமிழச்சி சார்பில் துவாக்குடியில் மருத்துவ முகாம். ரொட்டேரியன் ஷமீலா ராகுல் பங்கேற்பு.
ரோட்டரி கிளப் ஆப் திருச்சி தமிழச்சி சார்பில் திருச்சி துவாக்குடியில் உள்ள ஜி கோ கம்பெனியில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில், ஜி கோ கம்பெனி ஊழியர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மருத்துவர்களால் முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது . இந்த நிகழ்வில் ராபா கிளினிக் பவுண்டரும், திருச்சி தமிழச்சி ரோட்டரி கிளப் பிரசிடெண்டுமான ரொட்டேரியன் ஷமிலா ராகுல் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். மேலும் ரோட்டரி கிளப் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.