சாதனைகளை கூறி வாக்குகள் சேகரித்த அமைச்சர் ரகுபதி.

சாதனைகளை கூறி வாக்குகள் சேகரித்த அமைச்சர் ரகுபதி.

திருமயம்தொகுதி திமுக வேட்பாளர் ,அமைச்சர் ரகுபதி தொலையானூர், மேலூர்,கண்ணனூர் ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகளை கூறி ஓட்டுகள் சேகரித்தார். குறிப்பாக தொலையானூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி, இரு நெல் குடோன்கள்,கொள்ளைக்காட்டுபட்டியில் இருந்து கீழச்சிவல்பட்டி வரை தார்சாலை அமைத்து பஸ்வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. சோழப்பிராட்டிஅம்மன் கோயிலுக்கு தேர்செய்ய நிதி வழங்கி தேரோட்டம் நடைபெற உதவியவர் நம் முதல்வர் ஸ்டாலின். குறிப்பாக திருமயம் சமத்துவபுர வீடுகளை மராமத்து செய்த ரூ2.5 கோடி நிதி தந்தவர்முதல்வர் ஸ்டாலின். என்றார். வாரியப்பட்டியில் அவருக்கு மகளிர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது அவர்பேசுகையில் தேர்தல் அறிக்கையில் கூறியபடி நாங்கள் ஆட்சிக்கு வந்தவவுடன் மகளிர் விடியல் பயணம்,மகளிர் உரிமைத்தொகை தொடக்கப்பள்ளி மாணவ,மாணவியர் பயன்பெற காலை உணவுத்திட்டம், தவப்புதல்வன் திட்டம் ,நான் முதல்வன் திட்டம் கொண்டு வந்தோம்.அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த வுடன் இத்திட்டங்களில். மகளிர் உரிமைத்தொகை ரூ 2 ஆயிரமாக உயர்த்தப்படும் காலை உணவுத்திட்டம் 8 ம் வகுப்பு வரை விரிவு படுத்தப்படும்.. எல்லாகுடும்பங்களுக்கும் ரூ 8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்.அதனை வைத்து உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்றார்
அவருடன் திமுக அவைத்தலைவர் அழ.சுப் பிரமணியன்,ஒன்றிய செயலர் ஆறு.சிதம்பரம், முன்னாள் ஒன்றிய செயலர்கள் ஆர்எம்கருப்பையா,
,சரவணன், காங் முன்னாள் எம்.எல்.ஏ ராம.சுப்புராம், வட்டார காங்.தலைவர் மணிகண்டன்,,வி.சி. ஒன்றிய செயலர வீரமணி,சிபிஐ( எம்) ஜீவானந்தம் ,முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ,கோட்டையூர் மங் களராமன், மேலூர் சண்முகம், கோனாபட்டு எல். பழனியப்பன் ,தேமுதிக ஒன்றிய செயலர் சத்தியமூர்த்தி ,மகளிரணி சுமதி,சித்திரா,தேவி உட்பட கூட்டணி கட்சி பிரதிநிகள் வந்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்