திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு.
திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு.

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரும், அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், இன்று காலை தனது தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளான, மொராய் சிட்டி திருவளர்ச்சிபட்டி
குண்டூர் எம்.ஐ.டி (MIT) அய்யம்பட்டி
பர்மா காலனி என்று ஒவ்வொரு பகுதியிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே குண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மக்களின் அடிப்படைத் தேவைகளை விளக்கி உரையாற்றினார்.

ஒரு சிறப்பான ஆட்சியை நீங்கள் தமிழகத்தில் அமர வைத்த பொழுது தமிழக முதல்வர் அவர்கள் இல்லம் தேடி கல்வி, நான் புதல்வன், விடியல் பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை, என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்ததாகவும் எனவே மக்களாகிய நீங்கள் அனைவரும் என்னை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என எடுத்துரைத்தார். கடந்த கால சாதனைகளை விளக்கி, மீண்டும் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.