முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி அன்னவாசல் கிழக்கு, அன்னவாசம் மேற்கு ஒன்றியங்கள் மற்றும் விராலிமலையில் பூத் கமிட்டி பயிற்ச்சி கூட்டங்க்ள் நடந்தது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் பயிற்சிகள் குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் விராலிமலையில் நடந்த அஇஅதிமுக பூத் கமிட்டி பயிற்சி கூட்டத்தில் முன்னாள் ஆவின் பெருந்தலைவரும் விராலிமலை மேற்கு ஒன்றிய செயலாளருமான எஸ் பழனி யாண்டி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி விஜயபாஸ்கர் முன்னிலையில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.