விளக்கு பூஜை நிறைவு விழா முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பங்கேற்பு. 4000 பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.

விராலிமலை ஸ்ரீ மெய் கண்ணுடையாள் ஆலய குத்து விளக்கு பூஜை நிறைவு விழா முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பங்கேற்பு. 4000 பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.

விராலிமலையில் பிரசித்திபெற்ற மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தெய்வமானது விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்களின் குலதெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறது. சிறப்புமிக்க இக்கோவிலில் ஒவ்வொரு வருடம் மார்கழி மாதத்தின் முதல் நாளன்று குத்துவிளக்கு பூஜையானது தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அந்த மாதம் முழுவதும் நடைபெறும்.

அதேபோல் இந்த வருடமும் குத்துவிளக்கு பூஜையானது கடந்த டிசம்பர் மாதம் 19-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் மெய்க்கண்ணுடையாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாராதனைகள் நடைபெற்ற வந்தது. இந்நிலையில் குத்துவிளக்கு பூஜை 19ஆம் தேதி தொடங்கி நிறைவு விழா, பொங்கல் அன்று சிறப்பாக அதிகாலை மெய்கண்ணுடையாள் அம்மனுக்கு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பெண்கள் தாங்கள் கொண்டுவந்த குத்துவிளக்கை ஏற்றிவைத்து பூஜை செய்து மெய்க்கண்ணுடையாள் அம்மனை வழிபட்டனர்.

அதன்பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  இதில் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு மாங்கல்ய கயிறுடன் கூடிய பிரசாதப்பை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.

குத்துவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை குத்துவிளக்கு பூஜை  அமைப்பாளர் சுந்தரம் தலைமையில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்