திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தமிழ்நாடு வனத்துறை மூலம் நீர்நிலைகளில் உள்ள பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் இன்று தொடங்கியது.

காலை 6.00 மணிக்கு தொடங்கிய இந்த பணியில் வனத்துறையுடன்  வேர்கள் அமைப்பை சேர்ந்தவர்களும் பணியில் இணைந்து கொண்டனர்.

மூன்று குழுக்களாக பிரிந்து ஒரு குழு நாராயணபுரம் மலைப்பகுதி ஜவ்வாதுராம சமுத்திரம் ஏரி பகுதியிலும், இன்னொரு குழு வெலதிகாமணிபெண்டா மலை பகுதி சிலம்பம்குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளிலும், மூன்றாவது குழு மாதகடப்பா மலைப்பகுதி கோவிந்தம்மா ஏரி (அ)துரையேரி பகுதியிலும் கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர்.

இந்த மூன்று குழுவினரும் பல்வேறு வகையான பறவைகளை அடையாளம் கண்டு பதிவு செய்து வருகிறார்கள்.

நாளையும் தொடரும் இப்பணியில், வனக்காப்பாளர் திரு.குமார், விஐடி wildlife crime ஆய்வாளர் திரு.ரவி, வேர்கள் நிர்வாகிகள், மற்றும் வனத்துறை அலுவலர்கள், உள்ளூர்வாசிகள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்