கோவில்பட்டியில் தொடரும் கந்து வட்டி அவலம் ! ரியல் எஸ்டேட் பிரமுகர் தற்கொலை
உறவினர்கள் மறியல்.
கோவில்பட்டியில் தொடரும் கந்து வட்டி அவலம் ! ரியல் எஸ்டேட் பிரமுகர் தற்கொலை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பின்னரும் கந்து வட்டி கும்பல் மிரட்டியதோடு, வீட்டு பத்திரம், நகைகள், செக் ஆகியவற்றை பறித்து சென்று விட்டார்களாம்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான, கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த ஆறுமுக பாண்டியன் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாராம். தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆறுமுக பாண்டி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்.

புகார் கொடுத்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக போலிஸார் செயல்படுவதாக ஆறுமுக பாண்டி உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.