பொட்டலூரணியில் கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி மாதக் கூடல் போராட்டம்! பொதுமக்கள் பங்கேற்பு.
பொட்டலூரணியில் கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி மாதக் கூடல் போராட்டம்! பொதுமக்கள் பங்கேற்பு.

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி பகுதியிலுள்ள கழிவுமீன் நிறுவங்களை மூடக்கோரி 668 ஆவது (12.03.26) நாளாகத் போராட்டம் நடந்து வருகிறது. அதன் மாதக் கூடல் போராட்டம் பொட்டலூரணியில் நடைபெற்றது.
பொட்டலூரணி பகுதியிலுள்ள கழிவுமீன் நிறுவனங்களை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த ஐந்தாண்டுகளாக அவ்வப்போதும், இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். நாள் கூடல், மாதக் கூடல் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் எனப் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன்படி இந்த மாதத்திற்கான மாதக் கூடல் போராட்டம் பொட்டலூரணியில் நடைபெற்றது.
போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், போராட்டக்குழுவின் தலைமைப் பொறுப்பாளர் சண்முகம் வரவேற்புரையாற்றினார்.
மற்ற பொறுப்பாளர்களான இராதாகிருஷ்ணன், ஈஸ்டர் அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வைகுண்டமாரி கருத்துரையும் தமிழ்த் தேசியப் பேரவைப் பொறுப்பாளர் மணிமாறன் நோக்க உரையும் ஆற்றினர். சமூக ஆர்வலர் பிரபா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
கழிவுமீன் நிறுவனங்கள் மூடப்படவேண்டும், பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும், பொட்டலூரணி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிரைவேற்ற, குறை தீர்ப்புநாள் மனுவில் கோரியவாறு, மாவட்ட ஆட்சியர் சமாதானக் கூட்டம் நடத்த வேண்டும் எனப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
போராட்ட முன்னணியாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.