ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் புதிய மின் மாற்றியை தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ பழனியாண்டி.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் புதிய மின் மாற்றியை தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ பழனியாண்டி.
ஸ்ரீரங்கம் சட்ட மன்ற தொகுதிக்குட்ப ட்ட, மணிகண்டம் ஒன்றியத்தில்உள்ள இனியானூர் மற்றும் அரியாவூர் ஒத்தக்கடை கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த மின் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக புதிய மின்மாற்றியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி MLA அவர்கள் 110 KV மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மின்சார வாரிய அதிகாரிகள் கிருபாகரன், பிரபு மற்றும் Ex. ஊராட்சி தலைவர் மணிகண்டன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் திருச்சி லெட்சுமணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதவியாளர் ரவி ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் அபினேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்