விஜய் வாக்குறுதி: 2 ஏக்கர் வரை உள்ள விவசாயிகள் படிப்புச் செலவை அரசே ஏற்கும்- விஜய்.
விஜய் வாக்குறுதி: 2 ஏக்கர் வரை உள்ள விவசாயிகள் படிப்புச் செலவை அரசே ஏற்கும்- விஜய்.
இன்று தஞ்சாவூரில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய த.வெ.க தலைவர் விஜய் 2ஏக்கர் வரை உள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில, ஒன்றிய அரசு ஊழியர்களாக இல்லாதபட்சத்தில் அவர்கள் குழந்தைகளின் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட – தொழிற்கல்வி முதல் அனைத்து வகை – படிப்புகளின் செலவையும் அரசே ஏற்கும்.
தவெக ஆட்சி அமைத்தால் 500 ரேசன் கார்டுகளுக்கு ஒரு ரேசன் கடை; அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும் பாக்கெட் போட்டு விற்பனை செய்யப்படும். தவெக ஆட்சி அமைந்தவுடன் உரத்தட்டுப்பாடு சரி செய்யப்படும், கூட்டுறவு பயிர் கடன் ரத்து செய்யப்படும்.
5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும்.
5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் வங்கிக்கடனை 50% ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறு ஆராயப்படும். என்றார் தவெக தலைவர் விஜய்.