தொப்பூர் கணவாய் பகுதியில் இன்று கோர விபத்து ஏற்பட்டது. விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு நிச்சயம் துணை நிற்கும். அமைச்சர் உதயநிதி.
தொப்பூர் கணவாய் பகுதியில் இன்று கோர விபத்து ஏற்பட்டது. விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு நிச்சயம் துணை நிற்கும். அமைச்சர் உதயநிதி.

தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் மலைப்பாதை பகுதி சுமார் 6 கி.மீ தொலைவுக்கு அமைந்துள்ளது. இந்த சாலையில் கட்டமேடு முதல் போலீஸ் சோதனைச் சாவடி வரை உள்ள 3 கி.மீ சாலை மிகவும் சரிவாகவும், வளைவாகவும் காணப்படுகிறது.

தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது வழக்கம். இந்த பகுதியில் பாலங்கள் சரியாக பராமரிக்கப்படாதது, மலைப்பாதையில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வது போன்ற காரணங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இப் பகுதியில் இரட்டை பாலம் உள்ளது. இந்த பாலத்தின் மீது 2 லாரிகள், 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானன. விபத்தில் ஒரு லாரி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

5.8 km நீளமுள்ள தொப்பூர் கணவாயில் மாவட்ட நிர்வாகம் மற்றும் L&T நிறுவனமும் சேர்ந்து பல்வேறு முயற்சி செய்தும் இப்படிப்பட்ட விபத்துக்கள் நடக்கத்தான் செய்கின்றன.
விபத்து நடந்த தொப்பூர் கணவாய் பகுதிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் நடந்த கோர விபத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன, என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு நிச்சயம் துணை நிற்கும்- என்றும் கூறியுள்ளார் அமைச்சர் உதயநிதி.