அடிப்படை வசதிகள் செய்து தராததால்  வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி  பொதுமக்கள் தேர்தல்  புறக்கணிப்பு.

அடிப்படை வசதிகள் செய்து தராததால்  வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி  பொதுமக்கள் தேர்தல்  புறக்கணிப்பு.

தர்மபுரி மாவட்டம்,

பாப்பிரெட்டிப்பட்டி  பேரூராட்சிகுட்பட்ட 3 வது வார்டு கோட்டைமேடு அசோக் நகர் பொதுமக்கள் கடந்த 20 ஆண்டுகளாக அரசுக்கும் பேரூராட்சி EO மற்றும் வார்டு உறுப்பினருக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர், தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தி தருமாறு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மெத்தனமாக உள்ள பேரூராட்சி EO மற்றும் 3 வது வார்டு திமுக உறுப்பினர் செல்வம் ஆகியோரை கண்டித்து தங்கள் வீடுகளில்🏴 கருப்பு கொடி ஏற்றி பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்து உள்ளார்கள்.

இந்திய குடிமகனுக்கு குடிநீர் வழங்க மறுப்பது இந்திய அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது .

ஆதலால் இன்று 5 வது நாள் ஆலோசனை கூட்டத்தில், கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை தீவிர படுத்த போவதாக முடிவு கோட்டைமேடு அசோக நகர் ஊர் பொதுமக்கள் முடிவு செய்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்