திருப்பூர் நிருபருக்கு அரிவாள் வெட்டு. உயிருக்கு ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதி. பத்திரிக்கையாளர் சங்கங்கள் கண்டனம்.

திருப்பூர் நிருபருக்கு அரிவாள் வெட்டு. உயிருக்கு ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதி. பத்திரிக்கையாளர் சங்கங்கள் கண்டனம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர்  நியூஸ் 7 தமிழ் செய்திக் தொலைக்காட்சியின் செய்தியாளராக கடந்த  ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இவரை  நேற்று செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். வழக்கம் போல  இரவில் வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் அவரை நோட்டமிட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது. அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில்  கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து காவல் துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து எவ்வித சமரசமின்றி சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிச்செல்லாத வகையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சம்பவம் பெரும் அச்சுறுத்தலையும் உழைக்கும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.  இந்த கொடூர செயலில் சம்பந்தப்பட்ட சமுக விரோத கொலைகார கும்பலை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறது. இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் வலியுறுத்தியுள்ளார். அதேபோல்

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷிம் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்