சித்தூர் மாவட்டம் வி.கோட்டா (வேங்கடகிரி கோட்டாவில்) ஆந்திர ஜோதி நிருபர் கத்தியால் வெட்டி கொலை – மற்றொரு நிருபருக்குப் பலத்த காயம்.
சித்தூர் மாவட்டம் வி.கோட்டா (வேங்கடகிரி கோட்டாவில்) ஆந்திர ஜோதி நிருபர் கத்தியால் வெட்டி கொலை – மற்றொரு நிருபருக்குப் பலத்த காயம்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வி.கோட்டாவில் இன்று காலை
ஆந்திரஜோதி நாளிதழின் செய்தியாளர் ஜெகன்மோகன் ரெட்டி மர்ம நபர்களால் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சித்தூர் மாவட்டம் வி.கோட்டா ஆந்திர ஜோதி பத்திரிகையின் செய்தியாளர் ஜெகன் மோகன் ரெட்டி நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரைப் பின் தொடர்ந்து சென்று கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
அவருடன் இருந்த பிரஜாசக்தி பத்திரிகை செய்தியாளர் தாக்குதலைத் தடுக்க முயன்ற போது அவருக்கும் அருவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஜெகன்மோகன் ரெட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் செய்தியாளர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஊடகவியலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து (என்கவுண்டர்) கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பத்திரிகையாளர் சங்கங்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தை கண்டித்து சித்தூரில் உள்ள பத்திரிகையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.