துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் ரகுபதி பிரசசாரம். பாசிசத்தை சுட்டெரிக்க தீப்பெட்டிக்கு வாக்களியுங்கள்.
துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் ரகுபதி பிரசசாரம். பாசிசத்தை சுட்டெரிக்க தீப்பெட்டிக்கு வாக்களியுங்கள்.
திருச்சி பாராளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ, தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை பகுதியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் வேட்பாளர் துரை வைகோவுக்கு, திமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மமக, முலீக் என திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருக்கோகர்ணம் பகுதியில் இருந்து துரை வைகோ பிரசாரத்தை தொடங்கினார். தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்களியுங்கள், பாசிசத்தை சுட்டெரிக்க தீப்பெட்டிக்கு வாக்களியுங்கள், ஜனநாயகம் காக்க தீப்பெட்டிக்கு வாக்களியுங்கள் என தொண்டர்கள் முழக்கமிட ஊர்வலமாக சென்றனர். கோவில்பட்டி,, திருவப்பூர், புதுத்தெரு,அடப்பன்வயல், உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். துரை வைகோ சென்ற இடங்களில் எல்லாம் திமுக மற்றும் தோழமைகட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அமைச்சர் ரகுபதி, வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
பிரசாரத்தின் போது வேட்பாளர் துரை வைகோ பேசுகையில்
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக கட்ச தீவை மீட்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மூன்று வருடங்களாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் வஞ்சிக்கப்படுவதும் விரட்டப்படுவதும் அதிகரித்து உள்ளதே தவிர குறையவில்லை .
பத்து ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் தற்போது கச்சத்தீவு குறித்து பேசுவது மலிவான . கேவலமான அரசியல் . நான் வெளியூர் காரனா ?உள்ளூர் காரனா? என்ற பிரச்சினை கிடையாது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்யலாம். உள்ளூர் காரர்கள் வெற்றி பெற்று அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து விட்டார்கள் என்று யாராவது கூற முடியுமா என்றார்.
வேட்பாளருடன் அமைச்சர் ரகுபதி, மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன், தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கார்த்தி, சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,வடக்கு மாவட்டதிமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, நகர திமுக செயலாளர் ஆ.செந்தில், மதிமுக துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மதிமுக மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், டிடிசி சேரன், ம.திமுக மாவட்டபொறுப்பாளர் கலியமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் க.நைனாமுகம்மது,வட்டசெயலாளர்கள் ஆஷிப், ரெங்கராஜ், கண்மணிசுப்பு, மீனாட்சிசுந்தரம்,ராஜா,சாத்தையா, சித்ரா,பெ.ராஜேஸ்வரி, கவுன்சிலர் லதாகருணா, காங்கிரஸ் மேப்வீரையா, உள்ளிட்ட ஆயிரகணக்கானோர் பங்கேற்றனர்.