திருச்சி வரகனேரியில், திமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம். மாநகரசெயலாளர் மதிவாணன் பங்கேற்பு
திருச்சி வரகனேரியில், திமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்.
மாநகரசெயலாளர் மதிவாணன் பங்கேற்பு
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் அரியமங்கலம் பகுதி திமுக
31மற்றும் 31 ஏ வட்டக் கழகத்தின் சார்பில் 31 வது வட்டச் செயலாளர்
.கருப்பையா மற்றும் 31ஏ வட்டச் செயலாளர்
சாகுல் ஹமீது ஆகியோர் தலைமையில் வரகனேரி கடைவீதியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநகர செயலாளரும், மண்டல தலைவருமான மதிவாணன் , தலைமைக் கழக பேச்சாளர் ஆடுதுறை உத்திராபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் அரியமங்கலம் பகுதி கழகச் செயலாளர்
எ.எம் ஜி விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார் . மாவட்ட பிரதிநிதி அருண் சன்னாசி நன்றி கூறினார் . இந்த பொதுக்கூட்டத்தில்
மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள்
அ.த.த. செங்குட்டுவன் மூக்கன் நூர்கான் பொன்செல்லையா சந்திரமோகன் மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கடேஷ் குமார் வட்டகழகச் செயலாளர்கள் ரெங்கநாதன் கதிர்வேல் தலைமைக்கழக பேச்சாளர்கள் ஏர்போர்ட் பொன்னுச்சாமி பாலக்கரைகோவிந்தன் உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.