தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்.
விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைக்கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. ,அரசு தேங்காய்களை கொள்முதல் செய்து வினியோகம் செய்ய வேண்டும். கொப்பரைக்கும், நெல்லுக்கும் கரும்புக்கும் ஊக்க தொகை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி உறையூர் குறத்தெருவில் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில துணை செயலாளர் இந்திரஜித்,மாநில நிர்வாகக்குழு சிவசூரியன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், மாநகர் மாவட்ட செயலாளர் சிவா மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, பேரூர் நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.