திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

நிர்வாகிகள் பங்கேற்பு.

திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி எஸ்.டி.பி.ஐ.கட்சி தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொகுதி தலைவர் அப்பாஸ் மந்திரி தலைமையில் நடைபெற்றது.
தொகுதி துணை தலைவர் சிராஜுதீன்,துவாக்குடி நகர தலைவர் ஹக்கிம், வாழவந்தான் கோட்டை ஒன்றிய தலைவர் ரபீக், ஒன்றிய செயலாளர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவர்
பிச்சைக்கனி கலந்துக் கொண்டு பணிக்குழு நிர்வாகிகளின் செயல்திட்டங்கள் குறித்து விரிவாக விவரித்தார்.

மேலும் மாநில பொதுக்குழு உறுப்பினரும் சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட தலைவருமானஎஸ் எஸ் ரஹ்மத்துல்லா. மாவட்ட செயற்குழு உறுப்பினர் என் ஜினியர்.சதாம் உசேன், ஊடக அணி பாபு ஆகியோர்கள் கலந்து கொண்டு தேர்தல் விதிமுறைகள் மற்றும் பூத் கமிட்டி செயல்பாடுகளை குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் 35, வது வார்டு செயலாளர் அசாருதீன், சலீம் பாஷா 36வது வார்டு துணை தலைவர் இஸ்மாயில், 37வது வார்டு தலைவர் சேக் தாவூத்,துணை தலைவர் கவுஸ் பாட்ஷா, 38வது வார்டு தலைவர் சேக் முஜிபுர் ரகுமான், செயலாளர் மைதீன்,து.தலைவர் அக்பர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.இறுதியாக திருவெறும்பூர் தொகுதி பொருளாளர் சாதிக் பாஷா நன்றி உரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்