தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் மத்திய மண்டலத்தை சார்ந்த மாவட்டங்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பங்கேற்று சிறப்பித்தார்..

  • தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் மத்திய மண்டலத்தை சார்ந்த மாவட்டங்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்:
    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பங்கேற்று சிறப்பித்தார்..

தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் மத்திய மண்டலத்தை சார்ந்த அனைத்து மாவட்டங்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கே.கே.சி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் மத்திய மண்டலத்தை சார்ந்த அனைத்து மாவட்டங்களுக்கான இறுதி நாளான, விளையாட்டுப்போட்டிக்கு மத்திய மண்டல துணை இயக்குனர் குமார் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்ட அலுவலர் பானுப்பிரியா முன்னிலை வகித்தார். பின்னர் தொடங்கிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் மத்திய மண்டலத்தை சார்ந்த அனைத்து மாவட்டங்களுக்கான இறுதி விளையாட்டுப்போட்டியை கண்டு ரசித்த சிறப்பு விருந்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் பிற மாவட்ட அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை வீரர்கள்,பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்