திருச்சி விசிகாவின் மாநாடு பணிகள் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி விசிகாவின் மாநாடு பணிகள் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு வருகிற 26-ந் தேதி கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில்
நடைபெற உள்ளது.
இதற்கான மேடை அமைக்கும் பணிகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வரும் பணிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச் செல்வன் பணிகளை மேற்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவனின் தனிச்செயலாளர் தயாளன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளரும், கவுன்சிலருமான பிரபாகரன், மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மாவட்ட செயலாளர்கள் சக்திஆற்றலரசு, கலைச்செல்வன், குரு அன்புச்செல்வன், திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணைச் செயலாளர் புரோஸ்கான் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்