மக்களிடம் திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறுங்கள் திருச்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேச்சு.
மக்களிடம் திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறுங்கள் திருச்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேச்சு.
திருச்சி மாநகர் மாவட்டம் உறையூர் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உறையூரில் நடந்தது.மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.உறையூர் பகுதி கழகச் செயலாளர் என்.எஸ்.பூபதி என்கிற பூபேந்திரன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
கோகுல இந்திரா பேசுகையில்,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் அதிமுக எக்கு கோட்டையாக உள்ளது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றியை பெற்று எடப்பாடியாரை முதல்வராக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
இந்த வெற்றிக்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அனைத்து பூத் கமிட்டி உறுப்பினர்கள் வட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் பொறுப்போடு ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். மக்களிடம் திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி பூத் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் அவைத்தலைவர் ஐயப்பன்,மாநில துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன்
,கவுன்சிலர் அரவிந்தன்,முன்னாள் ஆவின் சேர்மன் இன்ஜினியர் கார்த்திகேயன்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா,மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்,நிர்வாகிகள் இலக்கிய அணி பாலாஜி,ஐ.டி.பிரிவு வெங்கட் பிரபு,அப்பாஸ்,கலைப்பிரிவு ஜான் எட்வர்டு,மகளிர் அணி நசிமா பாரிக்,பகுதிச் செயலாளர்கள் எம்.ஆர்.ஆர் முஸ்தபா, நாகநாதர் பாண்டி, சுரேஷ் குப்தா, புத்தூர் ராஜேந்திரன்,ரோஜர்,
இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் டி.ஆர்.சுரேஷ் குமார்,முன்னாள் கவுன்சிலர் இன்ஜினியர் ராஜா,வசந்தம் செல்வமணி, உறையூர் சாதிக்,பேச்சாளர் ஆரி தென்னூர் ஷாஜகான்,முன்னாள் கவுன்சிலர் லாவண்யா செல்வராஜ்,
வட்டக் கழகச் செயலாளர்கள் வினோத் குமார், கார்த்திகேயன், பிச்சை மணி,பேக்கரி முருகன், உறந்தை முத்தையா , உறந்தை ரவி சுப்ரா .அரவானூர் பன்னீர்செல்வம்,பகுதி கழக நிர்வாகிகள் எம்.ஜே.பி வெஸ்லி,சண்முக நதி, ராஜாளி சேகர் சந்திரசேகரன், ஜமீலா, ஜெயந்தி சிவா,அப்துல் ரசாக், சுரேஷ், செந்தில் நாதன்,ஆனந்த் பாபு உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் முன்னாள் அரசு வழக்கறிஞர் மலர் விழி நன்றி கூறினார்.