பாலக்கரையில் போதை மாத்திரைகளை பயன்படுத்திய நான்கு பேர் கைது. போதை மாத்திரைகள் பறிமுதல்

பாலக்கரையில் போதை மாத்திரைகளை பயன்படுத்திய நான்கு பேர் கைது. போதை மாத்திரைகள் பறிமுதல்

திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை பயன்படுத்தி வருவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் அந்த பகுதி முழுவதும் திடீரென்று சோதனை நடத்தினர்.

அப்பொழுது பெல்சி கிரவுண்ட் ரெயில்வே குடியிருப்பு அருகில் நான்கு வாலிபர்கள் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது தூரத்தில் போலீஸ் வேன் வருவதை பார்த்த வாலிபர்கள் அங்கிருந்து நைசாக நழுவ முயற்சி செய்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் வாலிபர்களை வழிமறித்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மேற்கண்ட நான்கு வாலிபர்களும் போதையில் இருந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது வாலிபர்கள் நான்கு பேரும் பே தை மாத்திரைகளை சாப்பிட்டு இருப்பது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது பாலக்கரை கூனி பஜார் பகுதியை சேர்ந்தவர்கள் சாமுவேல் (வயது 24)விக்ரம் ( வயது 24)ஜோசப் ஸ்டீபன் (வயது 23)பீமநகர் பகுதியை சேர்ந்த கிருஸ்டன் (வயது 19)என்பது தெரிய வந்தது. போது போதை மாத்திரைகளை வாங்கி அதனை விற்பதும் மற்றும் போதை மாத்திரையை பயன்படுத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்