திருச்சியில் 3 அரசு பள்ளிகளுக்கு மேஜைகள், நாற்காலிகள் திருநாவுக்கரசர் எம்.பி வழங்கினார்.

பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, திருச்சியில் 3 அரசு பள்ளிகளுக்கு மேஜைகள், நாற்காலிகள்

திருநாவுக்கரசர் எம்.பி வழங்கினார்.

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திருச்சி மாநகராட்சி 38-வது வார்டுக்கு உட்பட்ட அரசு ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பள்ளி தளவாட சாமான்களை திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் நேரில் சென்று பள்ளிக்கு வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் கோட்டத் தலைவர் எம். மதிவாணன், திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பி. கோவிந்தராஜன் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ், மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம், தாஜுதீன், காட்டூர் கோட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜா டேனியல் ராய், திருவெறும்பூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில்குமார். துவாக்குடி நகரத் தலைவர் ஆனந்தன் மாவட்ட செயலாளர் அர்ஜுன் யுவன் துவாக்குடி குணசேகரன் எழிலரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும் பொன்மலை தங்கேஸ்வரி நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் நவல்பட்டு போலீஸ்காலனி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளுக்கும் பெஞ்ச் டெஸ்க் உள்ளிட்ட பள்ளி தளவாட சாமான்களை நேரில் சென்று வழங்கினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்