சமூக ஆர்வலர்களின் கூக்குரல். சிவகிரி தாசில்தார் அதிரடி நடவடிக்கை.

சமூக ஆர்வலர்களின் கூக்குரல் சிவகிரி தாசில்தார் அதிரடி நடவடிக்கை.

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா, வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட துரைச்சாமியாபுரம் பஞ்சாயத்தின் கீழ் செயல்படும் துரைச்சாமியாபுரம் புதிய இந்திரா காலனிக்கு மேற்கு புறத்தில் கண்ணச்செம்பு மலை கடுவாபுடைக்கு கீழ்புறத்தில் அமைந்துள்ள நீர்த்தேக்க அணையை, சரியாக தூர்வாராததாலும், தண்ணீர் செல்லக்கூடிய வழித்தடத்தையும் சரியாக தூர்வாராததாலும் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக , மலையிலிருந்து வரக்கூடிய தண்ணீர் புதிய இந்திரா காலனி குடியிருப்புக்குள் புகுந்து, வீடுகளுக்குள் வைக்கப்பட்ட அனைத்து பொருட்களும் வீணாகி கொண்டு வருகிறது. இதனை தூர்வார வேண்டி மீனாட்சிபுரம் மற்றும் இடையன்குளத்தில் நடந்த கிராம சபையில் மாற்றுத்தை நோக்கி அமைப்பு சார்பாக பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த நீர்த்தேக்க அணையை பார்வையிடுவதாகவும் உறுதி அளித்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் நாளது தேதி வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது அந்த மக்கள் வீட்டை இழந்து, தூங்குவதற்கும் குடியிருப்பதற்கும் வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். பஞ்சாயத்து தலைவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் சொன்னபோது, காலையில் பார்த்துகொள்ளலாம் என்று அசால்டாக சொல்லிவிட்டாராம். இந்த நிலையில் சமூக ஆர்வலர்களின் தொடர் வேண்டுகோளுக்கிணங்க, பாதிக்கப்பட்டவர்களை சிவகிரி தாசில்தார் ஆனந்த் சம்பந்தவட்டவர்களின் வீடுகளுக்கே சென்று பாதுகாப்பான இடத்திற்கு பாதிக்கப்பட்டவர்களை  அழைத்துச் சென்று விட்டாராம்.

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்