கழிவுநீர் ஓடையை ஆக்கிரமிப்பு செய்து புதியதாக கட்டிய கட்டிடம். நடடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
கழிவுநீர் ஓடையை ஆக்கிரமிப்பு செய்து புதியதாக கட்டிய கட்டிடம். நடடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை கீழூர் பஸ் ஸ்டாண்ட் தென்புறம் கலையரங்கம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து பணி தொடங்கியது. ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் அதை முறைப்படி அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன்பின் கலையரங்கப் பணியை மேற் கொள்ளுங்கள் என புகார் போனது. புகாரை அடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வரும் சூழலில் கடையநல்லூர் வட்டாட்சியர் கட்டிடங்களை அகற்ற தமாதபடுத்தி வருகிறாராம். இதனால் தற்போது வையாபுரி மகன் பொன்னையா என்பவர் கழிவு நீர்ஓடையை குறுகலாக்கி மூடியதுடன் மெயின் ரோட்டையும் ஆக்கிரமித்து புதிதாக கட்டிடம் கட்டி வருகிறார். அதற்கு கட்டிட அங்கீகாரம் பேரூராட்சி வழங்க கூடாது எனவும் முறையாக அளவீடு செய்து கழிவு நீர் ஓடை செல்வதற்கு நீர்வழித்தடத்தை உறுதி செய்த பின்பு கட்டிட அங்கீகாரம் வழங்கவும் கலையரங்கம் கட்டவும் எந்தவித தடையும் இல்லை என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.