ஏ.சி.மெக்கானிக்குக்கு அரிவாள் வெட்டு. வாலிபர் மீது வழக்கு.

ஏ.சி.மெக்கானிக்குக்கு அரிவாள் வெட்டு. வாலிபர் மீது வழக்கு.

திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் .இவரது மகன் அஜய் (24). ஏ.சி மெக்கானிக். இவர் அப்பகுதியில் சேர்ந்த ஒருவரிடம் பணம் வாங்கியதாக தெரிகிறது. இதில் பணத்தை பாதி அளவுக்கு மேல் கொடுத்துள்ளார். மீதமுள்ள தொகையை கேட்டுள்ளனர். அதற்கு அவர் வேறு ஒரு நபரை காட்டியதாக தெரிகிறது. இதில் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரத்தியடைந்து ஏ.சி.மெக்கானிக் அஜய்யை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அஜய் கொடுத்த புகாரின் அடிப்படையில் மகாமுனி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்