முஸ்லிம் இலக்கிய மன்றம் சார்பாக ஹஜ் பயண வழியனுப்பு விழா. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர்காதர் மொய்தீன் கலந்து கொண்டார்.
முஸ்லிம் இலக்கிய மன்றம் சார்பாக ஹஜ் பயண வழியனுப்பு விழா. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர்காதர் மொய்தீன் கலந்து கொண்டார்.
இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக திருச்சி மாவட்டத்திலிருந்து 279 ஆண்கள் பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றவர்களுக்கு
திருச்சி முஸ்லிம் இலக்கிய மன்றம் சார்பாக வழியனுப்பு விழா பெரிய செளக் ஜாமியா பள்ளிவாசலில் நடைபெற்றது.
விழாவிற்கு மன்ற தலைவர் உமர் இக்பால் தலைமை தாங்கினார்,ஜாமிஆ மஸ்ஜித் இமாம் அஹ்மத் உசேன் கிராஅத் ஓதினார், பொதுச்செயலாளர் கவிஞர் சையது ஜாபர் வரவேற்று பேசினார், முப்தி உமர் பாரூக் நிகழ்ச்சியைச் தொகுத்து வழங்கினார்,
மன்ற பொருளாளர் முஹம்மது ஜலாலுத்தீன் அக்பர், துணைத்தலைவர் முஹம்மது ஜக்கிரியா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மஹல்லா ஜமாஅத் கெளரவ தலைவர் ஜி.எஸ். ஏ.மன்னான், மாவட்ட முஸ்லிம் மகளீர் சங்க செயலாளர் முஹம்மது உஸ்மான் சமஸ்பிரான் மஸ்ஜித் ஜமாஅத் தலைவர் ஷப்பீர் அஹமத், அனைத்து வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் சாகுல் அமீது, சவுக் ஜமாஅத் கமிட்டி செயலாளர் அப்துல் கரீம், 21-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மும்தாஜ் பேகம் பரிமள சுன்னத் ஜமாஅத் செயலாளர் முஹம்மது உசேன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
சமஸ்பிரான் மஸஜித் இமாம் எம்.ஹேச். ஷபி அஹமத் ஹஜ் பயண வழிகாட்டுதல் உரையாற்றினார். திருச்சி மாவட்ட அரசு டவுன் காஜி கே.ஜலீல் சுல்தான் ஆலிம் அனைத்து ஹஜ் பயணிகள் சார்பாக ஏற்புரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி மாவட்ட மகளீர் அணி தலைவர் எஸ்.ஆரிபா வாழ்த்துரை வழங்கினார் .இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் அனைத்து ஹஜ் பயணிகளுக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துரையாற்றினார்.
விழாவில் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மஹல்லா வாசிகள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை மன்ற செயற்குழு உறுப்பினர்கள் முகமது ஆதம், நௌஷாத், ஷாஜகான், சிராஜுதீன், ஹமீது அலி சேட், முகமது நாசர், சர்புதீன், அப்துல் சலாம், அப்துல் ரவூப், அகமத் இப்ராஹிம், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
நிறைவாக மன்ற இணைச்செயலாளர் முனைவர் சையத் ஜாகிர் ஹசன் நன்றி கூறினார்.