பொதுத்துறை ஓய்வூதியர்களின் சங்கங்கள் சார்பில் பென்சன் கோரி மாநில அளவிலான சிறப்பு கருத்தரங்கம் சிஐடியூ மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பங்கேற்பு.
பொதுத்துறை ஓய்வூதியர்களின் சங்கங்கள் சார்பில் பென்சன் கோரி மாநில அளவிலான சிறப்பு கருத்தரங்கம் சிஐடியூ மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பங்கேற்பு.
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு மற்றும் மத்திய, மாநில அனைத்து பொதுத்துறை ஓய்வூதியர்களின் சங்கங்கள் சார்பில் அனைவருக்கும் பென்சன் கோரி மாநில அளவிலான சிறப்பு கருத்தரங்கம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசா ஹாலில் நடந்தது. கருத்தரங்கிற்கு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர்டி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். தஞ்சைக் கோட்டச் சங்க பொதுச் செயலாளர் வ.சேதுராமன் வரவேற்றார்.
சிஐடியூ மாநில தலைவர் அ.சவுந்தரராசன், டி.என்.ஜி.இ.ஏ. மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம், ஏ.ஐ.ஐ.இ.ஏ. இணைச் செயலாளர் எம்.கிரிஜா,
ஜி.ஐ.இ.ஏ. – தென் மண்டல இணைச் செயலாளர் எஸ்.பாலசுப்ரமணியம், பி.இ.எஃப்.ஐ. செயலாளர் ஜெ.ஹேமன் குமார், பி.எஸ். என்.எல்.இ.யு. மாநில பொருளாளர் எஸ்.அஸ்லம் பாஷா, சிஐடியூ திருச்சி மாவட்ட செயலாளர் எஸ்.ரெங்கராஜன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
முடிவில் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு துணைத்தலைவர் சி. முத்துக்குமாரசாமி நன்றி கூறினார்.