பழநி பஞ்சாமிர்தம் விவகாரத்தில் கைதான திரைப்பட இயக்குநர் மோகன் ஜி விடுவிப்பு.

பழநி பஞ்சாமிர்தம் விவகாரத்தில் கைதான திரைப்பட இயக்குநர் மோகன் ஜி விடுவிப்பு.

பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திருச்சி, பழநி உள்பட பல்வேறு இடங்களில் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் மேலாளர் கவியரசு, சமயபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, சமயபுரம் போலீஸôர் வழக்குப் பதிந்து சென்னை சென்று, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைத்து, மோகன்ஜியைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரை திருச்சி அழைத்து வந்து, திருச்சி மாவட்ட 3}ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆஜர் படுத்தினர்.

இது தொடர்பாக, விசாரணை மேற்கொண்ட நீதிபதி பாலாஜி, முதல்நாள் கைது செய்து மறுநாள் ஆஜர் படுத்தியுள்ளீர்கள் ஏன், மேலும் கைது செய்வதற்கான காரணங்கள் குறித்து முறையாக பதிவு செய்யப்படவில்லை எனக்கூறி, அவரை சொந்த ஜாமீனில் செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டார். மோகன் ஜி பழைய வண்ணாரப்பேட்டை, திரெüபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சாட்டை துரைமுருகன் கைது சம்பவத்திலும், போலீஸôர் அவசர கதியில் வழக்குப் பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதும் இதேபோல போலீஸôரிடம் கேள்விகளை கேட்டு, கைதுக்கு முகாந்திரமில்லை எனக்கூறி ஜாமீன் வழங்கி நீதிபதி விடுவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்