தி.மு.க., ம.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, கமல்ஹாசன் இன்று திருச்சியில் பிரசாரம்.
தி.மு.க., ம.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, கமல்ஹாசன் இன்று திருச்சியில் பிரசாரம்.
பெரம்பலூர், துறையூரிலும்
ஆதரவு திரட்டுகிறார்.
திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளில் ம.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்தி.மு.க.கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.
கடந்த 29ந் தேதி ஈரோடு தொகுதியில் பிரசாரத்தை தொடங்கினார்.
திருச்சி, பெரம்பலூரில்…
இந்த நிலையில் திருச்சி, பொம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் ம.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று (செவ்வாய்க்கிழமை) அரசு பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இன்று மாலை 5 மணியளவில் திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு இருந்து தி.மு.க. கூட்டணியில் உள்ள ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து தீப்பெட்டி சின்னத்துக்கு வாக்கு கேட்டு பொதுமக்கள் மத்தியில்
பிரசாரம் செய்கிறார்.
மாலை 6.30 மணியளவில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்ட பெரம்பலூர் சங்குபேட்டை அருகிலும், இரவு 7.3 மணியளவில் துறையூர் பாலக்கரையிலும் பொதுமக்கள்பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து கமல்ஹாசன் பேசுகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நடிகர் கமல்ஹாசன் இன்று திருச்சி வந்தார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் தலைமையில் வரவேற்பு கொடுத்தனர் .பின்னர் அவர் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் ஓய்வெடுத்தார். மாலையில் பிரச்சாரம் செய்கிறார்
தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் 5 கட்டங்களாக மக்கள் நீதி மய்யட தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுஎன்பது குறிப்பிடத்தக்கது