லால்குடி நகராட்சி துணைத் தலைவரை கண்டித்து ஒப்பந்தப் பணியாளர்கள் போராட்டம்.
லால்குடி நகராட்சி துணைத் தலைவரை கண்டித்து ஒப்பந்தப் பணியாளர்கள் போராட்டம்.
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி துணைத் தலைவராக, திமுகவை சேர்ந்த சுகுணா உள்ளார். இவரது கணவர் ராஜ்மோகன், நகராட்சி நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்களை ஆபாசமாக, அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசுவதாக குற்றச்சாட்டு.
இந்நிலையில், சுகுணாவின் கணவர் ராஜ்மோகனை கண்டித்து, 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தற்போது தங்களது பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.