அனைவரும் ஒன்றிணைந்து, அர்ப்பணிப்போடு கா ங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும். திருச்சி கூட்டத்தில் திருநாவுக்கரசர் எம்.பி பேச்சு.

அனைவரும் ஒன்றிணைந்து, அர்ப்பணிப்போடு கா ங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக

பணியாற்ற வேண்டும். திருச்சி கூட்டத்தில் திருநாவுக்கரசர் எம்.பி பேச்சு.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கோட்டத் தலைவர்களுக்கு உத்தரவு நகல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அருணாச்சல மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு காங்கிரஸ் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ் தலைமை வகித்தார்.திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கட்சி சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ராஜா டேனியல், பிரியங்கா படேல், ஜெயம்கோபி உள்ளிட்ட 17 கோட்ட தலைவர்களுக்கு உத்தரவு நகல்களை வழங்கினார். தொடர்ந்து,திருநாவுக்கரசர் எம்பி பேசுகையில், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய
பணிகள் மற்றும் கட்சி செயல்பாடுகள் குறித்து பேசினார். மேலும்
கோட்டத்திற்குட்பட்ட, கோட்ட நிர்வாகிகள், வார்டு தலைவர்கள், வார்டு நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுடன் இணைந்து கட்சிப்பணியினை தீவிரப்படுத்த வேண்டும். காங்கிரஸ் பேரியக்க வளர்ச்சிக்காக முழுமையான அர்ப்பணிப்போடும் அரவணைப்போடும் செயல்பட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முருகேசன், முன்னால் ராணுவ அணி தலைவர் ராஜசேகரன், கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ.
கோட்ட தலைவர்கள்
ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், மார்க்கெட் சம்சுதீன்,ஜெயம் கோபி, மலர் வெங்கடேஷ், பாக்கியராஜ், வெங்கடேஷ் காந்தி, இஸ்மாயில், ஆர்.ஜி. முரளி, ஜெ.ஜெ. வின்சென்ட் ,தர்மேஷ், எட்வின் ராஜ், கிருஷ்ணா, அழகர், பாலசுந்தர், கனகராஜ், மணிவேல் அண்ணாதுரை.
மாவட்ட நிர்வாகிகள் மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ் ,சிறுபான்மை பிரிவு அப்துல் சலாம், ஜடி -மீடியா பிரிவு அரிசி கடை டேவிட், விஜய் பட்டேல், கலைப்பிரிவு ராகவேந்திரா, ஓபிசி அணி தர்கா தளபதி பகதூர்ஷா.
மாவட்ட நிர்வாகிகள்
எழிலரசன், அர்ஜுன் , யுவன், கிருஷ்ணமூர்த்தி, பரணி, கோகிலா, மொண்டப்பட்டி ராஜேந்திரன், மணி.
வார்டு தலைவர்கள் ஜாகீர் உசேன்,பெல்ட் சரவணன் , கண்ணன், விஜய் பக்தன், விமல், அப்துல்லா, பகதூர், அப்பாஸ், ஜாகிர், ஜாக்கி பாலு,தியாகராஜன், கமலா, மார்ட்டின், ரேணுகா, சசிகலா மற்றும் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்