கோவில்பட்டி அருகே மளிகை பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து.

கோவில்பட்டி அருகே மளிகை பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து.

மதுரை ஏர்போர்ட் அருகே உள்ள குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அழகர் (48), லாரி டிரைவரான இவர் நேற்று நள்ளிரவு மதுரை விளக்குத்தூண் பகுதியில் இருந்து லாரியில் மளிகை பொருள்களை ஏற்றிக்கொண்டு நாகர்கோவிலுக்கு சென்றுள்ளார். லாரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள நாலாட்டின்புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள சிறிய வளைவில் லாரி திரும்பிய போது திடீரென நிலை தடுமாறி சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயங்களுடன் அழகர் உயிர் தப்பினார். இருந்த போதிலும் லாரியில் ஏற்றி வந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் சேதம் அடைந்தன.

விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்