ஏலகிரி மலை சுற்றுலாதலத்தில் ஏ.ஜி.எஸ் ஹாலிடே ரிசார்டில் நடைபெற்ற கோலாகலம் புத்தாண்டு விழா.
ஏலகிரி மலை சுற்றுலாதலத்தில் ஏ.ஜி.எஸ் ஹாலிடே ரிசார்டில் நடைபெற்ற கோலாகலம் புத்தாண்டு விழா.

திருப்பத்தூர் மாவட்டம் சுற்றுலா தளமான ஏலகிரி மலை பகுதியில் உள்ள ஏ.ஜி.எஸ் ஹாலிடே ரிசார்டில் 2026 புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
2026 புத்தாண்டு வரவேற்கும் வகையில் வான வேடிக்கை வெடித்தும், டி.ஜே மியூசிக் உடன் நடனங்கள் ஆடி புத்தாண்டு வாழ்த்துகளை கூறி சிறப்பாக கொண்டாடினர்.

முன்னதாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஆம்பூர்,வாணியம்பாடி உள்ளிட்ட ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு வருகை தந்து புத்தாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடினர். இறுதியாக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலி நபர்களுக்கு ஏ.ஜி.எஸ் ஹாலிடே ரிசார் சார்பில் கிஃப்ட் கூப்பன்கள் வழங்கப்பட்டது.