திருப்பத்தூர் அருகே கந்திலி காவல் நிலையத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி காக்கங்கரை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி சுரேஷ்குமார் புகார்.

திருப்பத்தூர் அருகே கந்திலி காவல் நிலையத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி காக்கங்கரை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி சுரேஷ்குமார் புகார்.

மதுரையில் சட்டதுறை அமைச்சர் ரகுபதி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் சுடுகாட்டில் தான் பிணத்தை எரிக்க முடியும் கண்ட இடத்தில் பிணத்தை எரிக்க முடியாது. இதேபோல தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சுடுகாட்டையும் கோவிலில் ஏற்றப்படும் தீபத்தூணையும் ஒப்பிட்டு பேசி ஒட்டுமொத்த இந்துக்களின் மனதை புண்படுத்தியதாகவும், மதுரை நீதி அரசர்கள் வழங்கிய தீர்ப்பினை விமர்சிப்பது சட்ட விதிகளை மீறிய செயல் எனகூறி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை பகுதி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுரேஷ்குமார் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்