கல்லூரி மாணவனிடம் பணம் கேட்டு தகராறு. வீடுபுகுந்து இரும்பு கம்பியால் தாக்கிய 6 பேர் கொண்ட கும்பல். படுகாயங்களுடன், தாய் மற்றும் மகன் அரசு மருத்துவமனையில் அனுமதி.
கல்லூரி மாணவனிடம் பணம் கேட்டு தகராறு. வீடுபுகுந்து இரும்பு கம்பியால் தாக்கிய 6 பேர் கொண்ட கும்பல். படுகாயங்களுடன், தாய் மற்றும் மகன் அரசு மருத்துவமனையில் அனுமதி.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் ருபானா. இவர் கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.
ருபானாவின் மூத்த மகன் புர்ஹான் என்பவர் வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாணவன் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வரும் போது சில இளைஞர்கள் மாணவனை வழிமறித்து அவனிடம் பணம் கேட்டு மிட்டியுள்ளனர், அதனை தொடர்ந்து புர்ஹான் பணம் இல்லையெனக்கூறவே அந்த இளைஞர்கள் புர்ஹானின் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து புர்ஹான் சம்பவம் குறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்த நிலையில், மீண்டும் நேற்று இரவு 6 பேர் கொண்ட கும்பல் ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள புர்ஹானின் வீட்டிற்கு சென்று ஆபாச வார்த்தைகளால், புர்ஹான் மற்றும் அவரது தாயை திட்டி, இரும்புகம்பியால் இருவரை சரமாரியாக தாக்கி வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று படுகாயமடைந்த புர்ஹான் மற்றும் ருபானாவை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீஸார் இது குறித்து வழக்குபதிவு செய்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட காதர் பேட்டை காக்கி தெரு பகுதியை சேர்ந்த முக்தியார் (26) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.