திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரை

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரை.

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக அரசின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி “”மக்களைக் காப்போம் ; தமிழகத்தை மீட்போம்”” – என தமிழகத்தின் 234 தொகுதிகளில் மக்களின் ஆதரவைத் திரட்டும் வகையில் எழுச்சியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதன்படி, 110 வது தொகுதியாக இன்று திருவெறும்பூர் தொகுதியில் தனது சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில், முன்னாள் எம்பியும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான குமார் தலைமை வகித்தார். முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், செம்மலை, தங்கமணி, பரஞ்சோதி, கோகுலஇந்திரா, வளர்மதி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான பொதுமக்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்