பொன்னமராவதி அருகே முயல்களை வேட்டையாடும் என்ற மூன்று பேரை கைது செய்து அபராதம் விதித்த வனத்துறையினர்.

பொன்னமராவதி அருகே முயல்களை வேட்டையாடும் என்ற மூன்று பேரை கைது செய்து அபராதம் விதித்த வனத்துறையினர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முயல்கள் வேட்டையாடப்படுவதாக பொன்னமராவதி வனச்சரகருக்கு தகவல் வந்ததை எடுத்து புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் உத்தரவின் படி பொன்னமராவதி வனச்சரகர் இராமநாதன் தலைமையில் மற்றும் வனவர் சரவணன், மற்றும் வனக்காப்பளர் கனகவள்ளி அவர்களுடன் ரோந்து பணி சென்ற பொழுது கம்பி வலைகளை கொண்டு முயல்களை வேட்டை யாட் முயன்ற மயிலாப்பூரைச் சேர்ந்த ராமன்,பழனிச்சாமி – மைலாப்பூர் மற்றும் தொட்டியம் பட்டியைச் சேர்ந்த ஆனந்த் ஆகிய மூன்று பேர்களை கைது செய்த வனத்துறையினர் மூன்று பேருக்கும் தலா பத்தாயிரம் வீதம் மொத்தம் ரூபாய் முப்பதாயிரம் அபராதம் விதித்து அவர்களை விடுவித்தனர். மேலும் வருங்காலங்களில் பொன்னமராவதிப் பகுதிகளில் முயல் வேட்டைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனச்சரக அலுவலர் ராமநாதன் எச்சரிக்கை விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்