ஸ்ரீ பிடாரி அம்மன் ஆலய திருவிழாவில் இளைஞர்களுடன் சேர்ந்து நடனம் ஆடிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
ஸ்ரீ பிடாரி அம்மன் ஆலய திருவிழாவில் இளைஞர்களுடன் சேர்ந்து நடனம் ஆடிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி திருவேங்கைவாசல் பகுதியில் பழமை வாய்ந்த சிவன் ஆலயம் மற்றும் பிடாரி அம்மன் ஆலயம் உள்ளது இந்த சிவன் ஆலயத்தில் நடைபெறும் பவுர்ணமி விழாவானது மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழாவானது காப்புக் கட்டுதளுடன் கடந்த வாரம் தொடங்கியது. தினந்தோறும் சாமி திருவிதி உலா மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், திருவிழாவானது இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் பேரில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் சாமி தரிசனம் செய்த அவர் அங்கு சிலா குத்தி நேர்த்திகடன் செலுத்த வந்த ஐம்பதுக்கு மேற்பட்ட இளைஞர்களுடன் சேர்ந்து நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.