பொய் வழக்கு போடும் கன்னியாகுமரி காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
பொய் வழக்கு போடும் கன்னியாகுமரி காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் காவல் ஆய்வாளர் திருமதி.சீதாலெட்சுமியிடம் புகார் அளிக்க சென்ற புகார்தாரரை பல மணி நேரம் காக்க வைத்தும் புகார் அளிக்க சென்றவர் மீது பொய் வழக்கு பதிவு செய்தும் அவருக்கு ஆதரவாக சென்ற வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதை கண்டித்தும் அதற்கு துணைபோகும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்களை கண்டித்தும் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் காவல்துறை அதிகாரியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.