நாகர்கோவில் அருகே பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் வாலிபர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அருகே பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் வாலிபர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள தெங்கம்புதுரை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் அவரது சகோதரர் விஜயகுமார் (கட்டிட காண்ட்ராக்டர்) ஆகியோருக்கும் தென் தாமரைகுளத்தை சேர்ந்த விக்டர் ராஜதாஸ் இடையே ரூ.1 லட்சம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

செட்டிகுளத்தில் வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், விக்டர் ராஜதாஸ் காரை சகோதரர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த விஜயகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜெயக்குமார் புகாரின் பேரில் கோட்டார் போலீசார் விஜயகுமாரை கார் ஏற்றி படுகொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த டிவி மெக்கானிகான விக்டர் ராஜதாஸ் கைது-செய்தனர்.பணம் கேட்டு தகராறு செய்ததுடன் தன்னை அவதூறாக பேசியதால் கொலை செய்ததாக வாக்குமூலம்-கார் பறிமுதல்.மேலும் கைது செய்யப்பட்ட விக்டர் ராஜதாஸை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்