திருச்சியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் – வாலிபர் பலி. போலீசார் விசாரணை.
திருச்சியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் – வாலிபர் பலி. போலீசார் விசாரணை.
திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் தனுசுராஜ் (வயது 22). இவர் சம்பவத்தன்று தென்னூர் பாரதி நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 35 )என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அரியமங்கலம் எஸ்.ஐ.டி.அம்பிகாபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் திருவெறும்பர் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த சரண் (வயது 22) என்பவர் நண்பரான சச்சின் (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
இதையடுத்து இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த தனுசுராஜ், மணிகண்டன், சச்சின் ஆகியோரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.