கூலி உயர்வு கேட்டு காந்தி மார்க்கெட் தொழிலாளர்கள் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் -போராட்டம்.
கூலி உயர்வு கேட்டு காந்தி மார்க்கெட் தொழிலாளர்கள் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் -போராட்டம்.
30 ஆண்டு காலமாக வேலை செய்த
தொழிலாளர்களின் வேலையை பறித்து, வடமாநில தொழிலாளர்களுக்கு வேலை வழங்கியதையும், தவறான தகவல் கொடுத்து பெறப்பட்ட உயர்நீதி மன்ற உத்தரவை காரணம் காட்டி ஒட்டு மொத்த தொழிலாளிக்கும் விரோதமாக, முதலாளிக்கு ஆதரவாகவும் செயல்படும் காவல்துறையை கண்டித்தும்.
140 விதிப்படி 100 கிலோ மூட்டை சுமை தூக்க வைப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர் பிரச்சனையை தொழிலாளர் நல அலுவலகத்தில் பேசித்தீர்க்க வேண்டும்.
மீண்டும் வேலை வழங்கி 3000 சுமைப்பணி தொழிலாளர்களின் வேலை உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் சிஐடியூ
திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி காந்தி மார்கட் கமான் வளைவிலிருந்து தீப்பந்தம் ஏந்தி புறப்பட்ட ஊர்வலம் இ.பி.ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே நிறைவடைந்தது. பின்னர் அங்கு
கோரிக்கை விளக்க கூட்டம். நடந்தது.
கூட்டத்திற்கு. சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியூ மாவட்ட செயலாளர் ரெங்கராஜன்,
மாவட்ட தலைவர் சீனிவாசன்,
லாரி செட் சங்க செயலாளர்
ராமர், சிபிஎம் பகுதி செயலாளர் லெனின் மெடிக்கல் சங்க செயலாளர் செல்வராஜ், குடிநீர் வடிகால் வாரிய சங்க செயலாளர் மருதைராஜ் ஆகியோர் பேசினர்.
இதில் நிர்வாகிகள். ரமேஷ், இளையராஜா உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மூர்த்தி நன்றி கூறினார்.