மூன்று தெய்வங்களின் ஆசியோடு வெற்றி கூட்டணி : ஒற்றை விரலால் ஓங்கி அடித்து திமுகவுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்.
மூன்று தெய்வங்களின் ஆசியோடு வெற்றி கூட்டணி : ஒற்றை விரலால் ஓங்கி அடித்து திமுகவுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்.
திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் நேற்று மாலை நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், திருச்சி லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஓட்டு சேகரித்து பேசியதாவது:-
மனிதர்களாக பிறந்து தெய்வங்களாக மாறிய எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய 3 பேரின் ஆசியோடு அமைந்து இக்கூட்டணி மக்கள் போற்றும் மகத்தான கூட்டணி. 19ம்தேதி காலையிலேயே சென்று மக்கள் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டுவிடுங்கள். லேட்டாக போனால் உங்கள் ஓட்டை இங்குள்ள ஆளுங்கட்சியினர் போட்டுவிடுவார்கள். பணபலம், ஆட்சி பலம், அதிகார பலம், அதிகாரிகள் பலத்துடன் ஆளுங்கட்சியினர் உங்களை சந்திக்க வருவார்கள். நீங்கள், அவர்களுக்கு, கூட்டணி பலம், அன்பு பலத்தோடு அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
2011ல் ஜெயலலிதா விஜயகாந்த் அமைத்த கூட்டணி வெற்றிக் கூட்டணி. அதன்பிறகு தற்போது, பொதுச்செயலாளரான ஆன பிறகு பழனிசாமியும், இந்த பிரேமாவும் அமைத்துள்ள இந்த மக்கள் போற்றும் மகத்தான கூட்டணி வெற்றிக்கூட்டணியாக அமையும்.மத்திய, மாநில அரசுகள் அமைத்துள்ள கூட்டணி மக்களை வஞ்சிக்கும் கூட்டணி. அவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைறே்றவில்லை. வீட்டுவரி, சொத்து வரி, மின் கட்டணம் என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சீரழிவு, பாலியல் கொடுமைகள் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் மக்கள் தங்களது ஓற்றை விரலால் ஓங்கி அடித்து தண்டனை கொடுக்க வேண்டும். அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ கூட்டணி கட்சியினர் ஒற்றுமையுடன், கூட்டணி தர்மத்துடன் சேர்ந்து பணியாற்றினால் வெற்றி நிச்சயம்.
திருச்சி தொகுதியில் கருப்பையாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. அவர் வெற்றி பெற்றால், தொகுதி முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவார். இதற்கு முன் இருங்கிருந்த எம்பி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியை மக்கள் திட்டங்களுக்கு பயன்படுத்தவில்லை. கருப்பையா வெற்றி பெற்றால் அந்நிதியை மக்கள் திட்டங்களுக்காக முழுமையாக பயன்படுத்துவார். நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள பால்பண்ணை – துவாக்குடி வரையிலான சர்வீஸ் சாலை திட்டம் நிறைவேற்றப்படும். பெல் நிறுவனத்திற்கான ஆர்டர்கள் தனியார்களுக்கு வழங்கப்பட்டதால் அதை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான சிறு, குறு சார்பு நிறுவனங்களின் தொழிலாளர்கள் குடும்பங்கள் வறுமையில் உள்ளன. அதிமுக வெற்றி பெற்றால், தனியாருக்குச் செல்லும் ஆர்டர்கள் பெல் நறுவனத்திற்கே கிடைக்க வழிவகை செய்யப்படும். இத்திட்டங்கள் எல்லாம் நிறைவேற, கருப்பையாவுக்கு இரட்டைஇலையில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். உங்களை நம்பி கருப்பையாவை ஒப்படைத்துச் செல்கிறேன்’’, என்றார்.
பிரச்சாரத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், சீனிவாசன்,அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி, தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் டி.வி. கணேஷ், சன்னாசிப்பட்டி பாரதிதாசன்,ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினீயர் கார்த்திகேயன், மாநில துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா, சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான்,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி பகுதி செயலாளர்கள் பூபதி சுரேஷ் குப்தா ரோஜா அன்பழகன் நிர்வாகிகள் கலிலுல் ரகுமான், வாழைக்காய் மண்டி சுரேஷ் கயிலை கோபி, தேமுதிக பகுதி செயலாளர் என்.எஸ்.எம் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.