திருவரங்கம் எல்லைக்கரை அனுமார் கோவிலில் உபன்யாச நிகழ்ச்சி. திரளான பக்தர்கள் பங்கேற்பு.
திருவரங்கம் எல்லைக்கரை அனுமார் கோவிலில் உபன்யாச நிகழ்ச்சி. திரளான பக்தர்கள் பங்கேற்பு.
திருவரங்கம் எல்லைக்கரை அனுமார் கோவிலில் உபன்யாச நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில்
சிறந்த சமஸ்கிருத இலக்கியத்தின் மிக முக்கியமான ரகுவம்ச மகாகாவியத்தைப் பற்றி பிரபல பேச்சாளர் ராதிகா நரசிம்மன் உபன்யாசம் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில், ரகுவம்சம் காவியத்தின் உள்ளடக்கம், அதன் இலக்கிய நுட்பங்கள் மற்றும் தத்துவங்களை விவரித்தார். இக்காவியத்தின் மூலம் திலீபன் என்பவனின் அரசு நடத்திய பாங்கு, குடும்ப மதிப்பு ஆகியவற்றைப் பதிவுசெய்து, எவ்வாறு ராமர் இந்த பரம்பரையின் அரசனாக அவதரித்தார் என்று கூறி, அவற்றின் மரபுகளை புதிய தலைமுறைக்கு எடுத்துரைத்தார்.
அவர் பேசுகையில், “இக்காவியத்தின் உரையாடல்கள் மற்றும் கதை சொல்லும் பாணி, உள்ளார்ந்த உணர்வுகளை ஊக்குவிக்கிறது” என்றார்.
வியாச ராஜ மடத்தால் இக்கோவில் மிக சிறப்பாக நிர்ணயிக்க படுகிறது.
இந் நிகழ்ச்சி பலரால் பெரிதும் கவனம் பெற்றது, இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.