திருச்சி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம். பொது செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ. பங்கேற்பு.

திருச்சி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம். பொது செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ. பங்கேற்பு.

மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் பீமநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் பைஸ் அகமது தலைமை தாங்கினார். தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ம.ம.க மாவட்ட செயலாளர் இப்ராஹிம் வரவேற்பு உரையாற்றினார். ஐ.பி.பி. மாநில துணை செயலாளர் முகமது ரபீக் தொடக்க உரை ஆற்றினார்.
மமக பொது செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ, தமுமுக மாநில பொருளாளர் என்ஜினீயர் ஷபியுல்லாஹ் கான், துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா, மாநில அமைப்பு செயலாளர் புழல் ஷேக் முகமது ஆகியோர் நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் நடத்தி, வரும் காலங்களில் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பண்புகள் குறித்து உரையாற்றினார்கள்.

தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர், ஐ.டி. பிரிவு மாநில துணை செயலாளர் நஜீர், எஸ்.எம்.ஐ. மாநில துணை செயலாளர் அப்பீஸ், விழி அமைப்பின் மாநில துணை செயலாளர் முஸம்மில் கான் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர், தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் தீர்மானங்களை முன் முன்மொழிந்தனர், முடிவில் மாவட்ட துணை செயலாளர் அசாருதீன் நன்றி கூறினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அண்ணாநகர் பகுதி நிர்வாகிகள் அப்துல் நாசர், தென்னூர் சதாம், காஜா, மாவட்ட நிர்வாகிகள் முபாரக், பக்ரூதீன், இலியாஸ், ஜீபைர் ஆகியோர் பொதுக்குழு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்